ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரையிறுதி ஆட்டம் இன்று (மார்ச். 05) லாகூரில் நடைபெறுகிறது. இதில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அனிகள் மோதுகின்றன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் செய்ய தயாராகி வருகிறது. நேற்று நடந்த முதல் அரையிருதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.