
A.R.ரகுமான் முன்னாள் மனைவி மருத்துவமனையில் அனுமதி
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா ரஹ்மான் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், "மருத்துவ அவசரநிலை காரணமாக சாய்ரா ரஹ்மானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த கடினமான நேரத்தில் ஆதரவாக இருந்த, ரசுல் பூக்குட்டி மற்றும் அவரது மனைவி ஷாடியா, வந்தனா ஷா மற்றும் ரஹ்மான் ஆகியோருக்கும் சாய்ரா ரஹ்மான் சார்பாக மனமார்ந்த நன்றி" என பதிவிட்டுள்ளார்.