வெளிமாநில இளைஞரை போதையில் இருந்த ஆசாமி கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் சாலை ஓரத்தில் உட்கார்ந்திருந்த வெளிமாநில நபரை முழு போதையில் இருந்த நபர் சகட்டுமேனிக்கு கால்களால் எட்டி உதைத்து கொடுமைப்படுத்தினார். தடுக்க வந்த மனைவி மீதும் தாக்குதல் நடத்தினார். வீடியோ வைரலான நிலையில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க பலரும் கோரியுள்ளனர்.