அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஈரோடு கோபிச்செட்டிப்பளையத்தில் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்சியை சேர்ந்த இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. அந்தியூர் நிர்வாகிகளை அழைக்கவில்லை என புகார் எழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து செங்கோட்டையனிடம் சிலர் வாக்குவாதம் செய்ததோடு ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கியதால் பரபரப்பு நிலவியது.