சிவகாசியில் பணி நேரத்தில் மதுபான பாரில் மது அருந்திவிட்டு மாமன்ற உறுப்பினர்களை தரக்குறைவாக பேசிய வீடியோ வைரலான நிலையில் மாநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி குடிநீர் இணைப்பு வழங்கல் பிரிவில் பணிபுரியும் மகேஷ்வரன் என்பவரை சஸ்பெண்ட் செய்ததோடு அவருடன் இருந்த மற்றொரு ஊழியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.