திருவடனை - Tiruvadanai

தேவிபட்டினம், தொண்டியில் கப்பற்படை அதிகாரிகள் ஆய்வு

தேவிபட்டினம், தொண்டி மரைன் போலீஸ் ஸ்டேஷன்களில் இந்திய கடலோர காவல்படை மற்றும் கப்பற்படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடல் வழியாக தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தேவிபட்டினம் முதல் எஸ். பி. பட்டினம் வரை கடலோர பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையை சேர்ந்த அதிகாரிகள் ஆனந்த்குமார், அகில் எஸ். நயர், ராம்கிருஷ்ணபாபர் ஆகியோர் தேவிபட்டினம், தொண்டியில் உள்ள மரைன் போலீஸ் ஸ்டேஷன்களில் நடைபெறும் பணிகள் குறித்தும், கடற்கரை பகுதிகளுக்கு சென்று மீனவர்கள் படகுகளை நிறுத்தும் இடங்களையும் பார்வையிட்டனர். தேவிபட்டினம் எஸ். ஐ. அய்யனார், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் மரைன் போலீசார் உடனிருந்தனர். பயங்கரவாதிகள் நடமாட்டம், கண்காணிப்பு பணிகள் குறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினர்

வீடியோஸ்


இராமநாதபுரம்