தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சோமாஜிகுடாவில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு எதிரே ஸ்வாதி டிஃபன்ஸ் என்ற உணவகம் இயங்கி வருகிறது. அங்கு, ராகவேந்திர குமார் என்ற நபர் மசால் தோசை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது, தோசையில் உயிருடன் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டதற்கு அவர் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது. இதனால், உணவு பாதுகாப்புத்துறையில் புகார் அளித்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.