‘ப்ளூ ஜாவா’ என்றழைக்கப்படும் நீல நிற வாழைப்பழங்கள் தென் கிழக்கு ஆசியா மற்றும் ஹவாய் தீவில் செழித்து வளர்கின்றன. வெளிப்புறத் தோல் மட்டுமல்லாமல், பழமும் நீல நிறத்தில் காணப்படுகிறது. இதை உண்ணும் போது வெண்ணிலா ஐஸ்கீரீம் சுவையுடன் இருக்குமாம். இதனால் இந்த பழத்திற்கு மவுசு அதிகமாக இருக்கிறது. டெசர்ட் மற்றும் கேக் செய்ய அதிகளவில் இந்த பழங்கள் பயன்படுகிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம் ஆகியவை நிறைந்துள்ளன.