சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வேலடி மடை கிராமத்தில் விநாயகர் கோவில் கும்பிடுவதில் கடந்த ஒரு வருடமாக அப்பகுதியில் உள்ள இரு சமூகத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில்இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வேலடிமடை பகுதியைச் சேர்ந்த சந்திரன், பெரியசாமி, சரவணன் ஆகிய மூன்று பேரை செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த தனபால், ரஞ்சித், கோச்சடை பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் வேலடி மடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் உட்பட 40 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக மானாமதுரை காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் இளையான்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜோதி முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.