பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் இருக்கும் கிராம மக்கள்

78பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளுக்கு எவ்வித தொந்தரவும் செய்யாமல் பறவைகளைதங்களது குழந்தைகள் போல் பாதுகாத்து அவைகளின் நலன் கருதி இப்பகுதியில் உள்ள கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடி பட்டி கிராம மக்கள் கடந்த சுமார் 46 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளியன்று வெடி வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர். மேலும் கோயில் விழாக்காலங்களிலும் மற்ற இதர நிகழ்வுகளுக்கும் எந்த ஒரு வான வெடி போன்ற அதிர்வு தரும் சத்தங்களை தவிர்த்து வருகின்றனர். பறவைகளுக்காக இம்மக்கள் செய்யும் தியாக உணர்வை கருத்தில் கொண்டு வருடந்தோறும் வனத்துறை சார்பில் இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வனச்சரக அதிகாரி (Ranger) கலந்து கொண்டு கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கிப் பாராட்டினார். தொடர்ந்து கிராம மக்கள் கண்மாய் மடை, கண்மாய் பகுதிகளை சீரமைக்கக் கோரி வனச்சரக அலுவலரிடம் முறையிட்டனர். அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக சரிசெய்து தரப்படும் என்று உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் வன காப்பாளர்கள் மற்றும் வனவர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி