உலகம் சுற்றிய தமிழர் சோமலே" நினைவு தினம்

77பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் செயல்படும் அரசு நூலக வளாகத்தில் உலகம் சுற்றிய தமிழர் எனப் போற்றப்படும் சோமலே வின் 38வது நினைவு தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், நூலகர்கள் என பலரும் பங்கேற்று சோமலே தமிழுக்காக ஆற்றிய பணிகளையும் அவரால் அர்ப்பணிக்கப்பட்ட நூல்களையும் அதன் சிறப்புகளையும் மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். தொடர்ந்து இக்காலத்தில் நூலகத்திற்கு சென்று பயனுள்ள கருத்தால மிக்க நூல்களை படிப்பது மக்கள் மத்தியில் மிகவும் அரிதான செயலாக ஒன்றாக மாறி விட்டது. இந்த இளம் வயதில் மாணவர்களாகிய நீங்கள் பள்ளிக்கு சென்று படிக்கும் பாட புத்தகங்களோடு சமுதாய சிந்தனையும், பொது அறிவையும், நூலகத்துக்கு சென்று வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். சோமலே தமிழின் மீது கொண்ட அதீத பற்றின் காரணமாக அவரை கௌரவிக்கும் பொருட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் இயற்றிய அனைத்து நூல்களையும் தமிழக அரசு அவற்றை அரசுடைமையாக்கி அவரின் வாரிசுக்கு ரூபாய் பத்து லட்சம் தந்து கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி