35 ஆண்டுகளாக பெட்டு கடலையை சுவைத்து செல்லும் கோயில் மாடு

57பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 35 ஆண்டுகளாக பசு மாடு தினந்தோறும் பலசரக்கடைக்குள் சென்று உணவு அருந்தும் அதிசய நிகழ்வு நடைபெற்று வருகிறது. சிங்கம்புணரியில் கடந்த 35 ஆண்டுகளாக மாசிலாமணி என்பவர் பல சரக்கு கடையை நடத்தி வருகிறார். இவர் காலையில் கடையை திறந்தவுடன் கோயில் பசுமாடு கடைக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தாமல் வெல்லம் பொட்டுக்கடலையை சுவைத்து மகிழ்ந்து செல்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் சிறு கன்று குட்டியாக இருந்த இந்த பசு மாடு தற்போது கன்று குட்டியே ஈன்று அதனுடன் கடைக்குள் நுழைந்து தனக்குத் தேவையானவற்றை சுவைத்து செல்கிறது. கடந்த 35 ஆண்டுகளாக அன்றாட நிகழ்வாக நடைபெறும் இந்நிகழ்ச்சி உள்ளூர் மக்களுக்கு பழகிப்போன ஒன்றாக இருந்தாலும், புதிதாக காண்பவர்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயில் மாடு என்பதால் அதனை எந்த தொந்தரவும் யாரும் செய்வது கிடையாது அது கடைக்குள் நுழைந்து பிற பொருட்களை சேதப்படுத்தாமல் சென்று விடுவதால் யாருக்கும் எந்த ஒரு அச்ச உணர்வும் ஏற்படுவது கிடையாது. மேலும் தங்கள் கடைக்கு வருவதால் வியாபாரம் செழித்து வளர்ந்து தற்போது நல்ல நிலையில் உள்ளதா வியாபாரி மாசிலாமணி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி