சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பாரதி நகரில் பூட்டி இருந்த நான்கு வீடுகளை திட்டமிட்டு நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். பாரதி நகர் கீதாஞ்சலி தெருவை சேர்ந்த ஆசிரியை சிவகாமி வீட்டிலும், அங்கையர்கன்னி, பாண்டி மீனா மற்றும் கனிமொழி வீடுகளில் வெளியூர் சென்ற நிலையில் பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையர்கள் பின்பக்க கதவை உடைத்து தங்கம் வெள்ளி ரொக்கப் பணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் 9 பவுன் தங்க நகையும், வெள்ளி பொருட்களும் சுமார் 1 லட்சம் பணமும் திருடு போயுள்ளது தெரியவந்துள்ளது. சம்பவம் அறிந்து வந்த சிங்கம்புணரி காவல்துறையினர் கொள்ளை போன வீடுகளில் தடயங்களை சேகரித்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே பகுதியில் ஒரே நாளில் நான்கு வீடுகளில் திருடு போயுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.