தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம்

82பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அச்சரம்பட்டியில் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. கீழசேவல்பட்டி - கீரணிப்பட்டி
சாலையில் பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரிய மாட்டு பிரிவில் 23 ஜோடிகளும், 2 சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு பிரிவில் 27 ஜோடிகள் என மொத்தம் 50 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும் பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களில் வந்து மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கத் தொகையும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது, மேலும் கலந்து கொண்ட அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கபட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி