ஆட்டு இறைச்சி வியாபாரிகளுக்கு ஆட்சியர் முக்கிய தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஆட்டு இறைச்சி வியாபாரம் செய்யும் அனைத்து வணிகர்களும் உரிய உரிமம் / பதிவு சான்று பெற்றிருத்தல் வேண்டும். ஆடுகள் வதை செய்யுமிடங்களில் போதிய அளவு தண்ணீர் வசதி ஏற்படுத்துதல் வேண்டும். குறிப்பாக, நோயுற்ற ஆடுகளை வதை செய்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். சுகாதாரமான முறையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யுமிடத்தினை பேணிக்காத்தல் வேண்டும். பணிபுரியும் பணியாளர்கள் மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். ஆட்டு இறைச்சியை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்தல் வேண்டும். தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் 94440 42322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.