சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வருகின்ற 27-10-2024 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள 223 வது குருபூஜை விழாவினை முன்னிட்டு மதுரையிலிருந்து பூவந்தி, சிவகங்கை வழியாக தொண்டி வரை செல்லும் வாகன வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக மதுரையிலிருந்து தொண்டி செல்லும் வாகனங்கள் மதுரையிலிருந்து புறப்பட்டு மேலூர்-இடையமேலூர்-சிவகங்கை-மேலூர் ரோடுபைப்பாஸ்-ஒக்கூர்-நாட்டரசன்கோட்டை-கண்டுப்பட்டி-வெற்றியூர் சந்திப்பு -ஒட்டாணம்-ஆண்டிச்சியூரணி-திருவேகம்பத்தூர்-சி. கே. மங்கலம்-திருவாடனை வழியாக தொண்டி செல்ல வேண்டும் என இன்று இரவு எட்டு மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.