சிவகங்கையில் பயங்கர ஆயுதங்களுடன் 4பேர்கைது

84பார்த்தது
சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்த சு. மோகன்தாஸ்(27). இவரது நண்பரான தினேஷ் என்பவர் அரசனேரிபிளமேடு பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவரின் உறவுக்காரப்பெண்ணிடம் செல்பேசியில் தகாத வார்த்தைகள் பேசியதாகக்கூறப்படுகிறது.
இதையடுத்து, அரவிந்தன், அவரது நண்பர்கள் நிரஞ்சன், ராஜா, அழகேசன் ஆகிய 4 பேரும் காரில் சென்று சூரக்குளம் அருகே கற்பகவிநாயகரர் கோயில் அருகே தனது நண்பர் மோகன்தாஸ் என்பவருடன் நின்று கொண்டிருந்த தினேஷிடம் தகராறு செய்து தாக்கினர். அப்பொழுது அவர்களிடமிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் தினேஷ் தப்பிச்சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்தன் உள்ளிட்டோர் அங்கு நின்று கொண்டிருந்த அவரது நண்பர்
மோகன்தாஸ் என்பவரை காரில்வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர் இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சிவகங்கை நகர் காவல்நிலை உதவி ஆய்வாளர் ஹரி, காவலர் சுப்பையா ஆகியோர் மோட்டார் பைக்கில் சினிமா பாணியில் சுமார் 5 கிமீ தொலைவுக்கு விரட்டிச்சென்று சிவகங்கை செந்தமிழ் நகர் அருகே காரை மடக்கி பிடித்து, காரில் இருந்த மோகன்தாஸ்சை மீட்டு அவரை கடத்திய அரவிந்தன், அவரது நண்பர்கள் நிரஞ்சன், ராஜா, அழகேசன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி