சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் உள்ள மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை தொகுதி எம். எல். ஏ. , பி. ஆர். செந்தில்நாதன் பேசுகையில்: மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 223 வது குருபூஜை முன்னிட்டு காளையார் கோயில் பகுதியில் அவர்களின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அரசியல் வாரிசும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் வாரிசுமான எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களுக்கு இடம் ஒதுக்கி கொடுத்து அதில் நினைவாலயம் கட்டியவர் அம்மாவின் ஆட்சி காலத்தில் தான். மாமன்னர்கள் மருதுபாண்டியர் அவர்களின் தேசப்பற்று நாட்டுப்பற்று அவர்களின் பெருமை உள்ளிட்டவற்றை போற்றும் வகையில் இன்று அவர்களுக்கு மரியாதை செலுத்தினோம். அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவர்களுக்காக கலையரங்கம் கட்டப்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் கோரிக்கைகளையும் வைத்தோம் நிலையில் 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோபுர வாசல் முன் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.