சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தென்மண்டல மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி வரை நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் காமராஜர் தலைமை தாங்கினார்
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலச் செயலாளர் மாசிலாமணி மாநிலத் தலைவர் சுப குணசேகரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் சாத்தையா மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் பா மருது கே கோபால் மானாமதுரை ஒன்றிய செயலாளர் சங்கையா சிவகங்கை ஒன்றிய செயலாளர் சின்னக் கருப்பு மாதவன் திருப்புவனம் ஒன்றிய செயலாளர் மோகன் ஜனசக்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் மண்ணில் வளத்தையும் நீர் ஆதாரத்தையும் அழிக்கும் யூக்க லிப்டஸ் மரங்களை அழிக்க வேண்டுமெனவும்
விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு முன்வர வேண்டுமென தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.