சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆடு மற்றும் கோழிகளின் சந்தையாகவும் அதன் பின்பு காய்கறிகள் பல சரக்கு மற்றும் தின்பண்டங்கள் போன்றவை விற்கக்கூடிய சந்தையாகவும் இயங்கி வருகிறது. இன்னும் தீபாவளிக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் இன்று திருப்புவனம் ஆட்டுச் சந்தைக்கு 2000 ஆடுகளுக்கு மேல் கொண்டுவரப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் ஆடுகள் விற்பனையாகி விட்டதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று மட்டும் மூன்று கோடி ரூபாய் அளவு வியாபாரம் நடந்ததாக கூறுகின்றனர் இதனால் வாங்குபவரும் விற்பவரும் இருவருமே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.