சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலையில் பட்டமளிப்பு விழாவில் பா. ஜ. , க மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். இதை கல்வி அமைச்சர்கள் உணர வேண்டும். மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். அவர்களிடம் உங்கள் கருத்துக்களை அறிவுரைகளை கூறுங்கள். ஆளுநர் தேவையில்லை என கூறும் விஜயை மக்கள் தேவையில்லை என கூறினால் எப்படி இருக்கும். அவர் அரசியலமைப்பை படிக்க வேண்டும். ஆளுநர் குறித்து சர்ச்சையாக பேசுவது அறவிலித்தனம். 2010&ல் தமிழ்நாட்டை சேர்ந்த தி. மு. க. , அமைச்சர்தான் பார்லிமெண்டில் நீட் கோரிக்கையை முன் வைத்தனர். இன்று தி. மு. க. , வும் காங்கிரசும் பேசுவது பொய்த்தனம். தி. மு. க. , சொல்வதை பாலோ செய்து பேசினால்தான் நமக்கு சோறு வேகும் என விஜய் நினைக்கின்றார். திராவிட மாடல் என்பது தேசிய வெறுப்பு அரசியலின் ஆணி வேர்.
பாரத பிரதமரே திராவிடத்தை சேர்ந்தவர். பஞ்ச திராவிடம். இந்தியா 56 தேசங்களாக இருந்தது. அது பஞ்ச திராவிடம், பஞ்ச கவுடம் என 2 பெரிய நிலப்பரப்பாக பிரிந்தது. காடுகள் நிறைந்த பகுதி பஞ்ச திராவிடம். நாட்டின் சரித்திரம், தான் யார் என்று தெரியாதவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும். இனத்தை அல்ல என்று தெரிவித்தார்.