சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 223 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் முன்னிட்டு அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஓ பி எஸ் தலைமையில் ஏராளமானோர் அவரது நினைவிடத்தில் மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் எடுத்து காட்டிய நீதி, நியாயம், தர்மம் வழியினை மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் பணியினை அதிமுக உரிமை மீட்பு குழு மேற்கொள்ளும் என்றார். அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து முயற்சியில் எங்களிடம் இவ்வித தடுமாற்றமும் இல்லை என்றார். மீண்டும் தொண்டர்கள் ஒன்றிணைந்து தமிழகத்தில் திமுக ஆட்சியினை நிலை நிறுத்துவார்கள். அதிமுக குறித்து நீதிமன்றங்களில் தற்காலிக தீர்ப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இடையில் வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதி தீர்ப்பு ஆகாது. விஜய் மாநாடு இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது ஏற்பட்ட எழுச்சி இன்றும் எங்களிடம் தான் உள்ளது என்றார். அதிமுக தொண்டர்களில் உரிமையை மீட்கின்ற குழுவாக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதிமுக நிரந்தர பொது செயலாளர் ஆக அம்மாவிற்கு 1. 5 கோடி தொண்டர்களால் வழங்கப்பட்ட பதவியை, எப்படி ரத்து செய்ய முடியும் என்றார்.