சிவகங்கை அருகே கல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பால்சாமி இவர் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்பொழுது கிணற்றில் அடையாளம் தெரியாத 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் சடலமாக மிதந்துள்ளது போலீசார் விசாரித்து வந்த நிலையில் விசாரணையில், சிறுமியின் மரணத்துக்கு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள வாழான்கோட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் (34) என்பவர்தான் காரணம் என்பது தெரியவந்தது.
மேலும், இவர் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்று சில வருடங்களாக சிறையில் இருந்துவிட்டு 3 வருடங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையாகி வெளிவந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி, மனைவியை பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அப்பொழுது மதுரை, சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி(13) என்ற சிறுமியின் தாயும் சிகிச்சைக்காக அதே மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.
அப்பொழுது அந்த சிறுமிக்கும் சதீஷுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியை தனது உறவினர் வீட்டிற்கு கூட்டிச்சென்று போய் விட்டு திரும்பி வருவதாக சதீஷ் அழைத்துச் சென்று, கல்குளம் பகுதியில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தாராம். அச்சிறுமி வெளியில் சொல்லி விடுவார் என அப்பகுதியில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார் போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சித்த பொழுது கால் முறிவு ஏற்பட்டுள்ளது