ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலினை வெளியிட்ட ஆட்சியர்

65பார்த்தது
ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலினை வெளியிட்ட ஆட்சியர்
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, 27. 03. 2024-ஐ தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024-க்கான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலினை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இன்று (29. 10. 2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துக்கழுவன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) மேசியாதாஸ், அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், துணை வட்டாட்சியர் (தேர்தல்), அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி