மருது திருப்பத்தூர் என்று அறிவிக்க வேண்டுமென கோரிக்கை

80பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 223 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஸ்ரீதர் வாண்டையார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில்: மன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு நாளிலே காளையார் கோயிலுக்கு 40வது ஆண்டாக தொடர்ந்து மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பாக அஞ்சலி செலுத்துகிறோம். அதேபோல இங்கு அஞ்சலி செலுத்துவரக்கூடிய மக்களுக்கு 24 ஆண்டுகளாக தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகிறோம். மருது பாண்டியர்கள், முத்து வடுகநாதரை கொலை செய்தவர்களான ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்டெடுத்த மாமன்னர்களின் வீரத்தின் அடையாளம் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் எல்லாம் பெருந்திரளாக திரண்டு வருகிறார்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மருதுபாண்டியர் 24 ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட நாள், அதனால் 24ஆம் தேதி அரசு விழாவாக நடத்துகிறார்கள். பொது மக்கள் எல்லோரும் 27ஆம் தேதி காளையார்கோவில்வந்து வணங்கி செல்கின்றனர். அதனால்தான் 27ஆம் தேதி இங்கு வருகிறோம். சிவகங்கையில் ஒரு திருப்பத்தூர், வட ஆர்காடில் ஒரு திருப்பத்தூர் என உள்ளது. இது மக்களிடம் குழப்பம் ஏற்படுகிறது. எனவே சிவகங்கை திருப்பத்தூரை மருது திருப்பத்தூர் என பெயர் வைக்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி