மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கண்ணீர் மல்க மனு!

84பார்த்தது
சிவகங்கையில் தமிழ்நாடு மாற்று திறனாளி நல வாரிய உறுப்பினரான புஷ்பராஜ் என்பவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் தாய் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சில தினங்களுக்கு முன்பு அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் அந்த இல்லத்தை அதிரடி ஆய்வு மேற்கொண்ட அரசு அதிகாரிகள் அங்கு இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒன்பது நபர்களை மீட்டெடுத்து அரசு காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து சம்பந்தப்பட்ட தாய் இல்லத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த இல்லத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததோடு அந்த இல்லத்தால் நாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம் என மனு கொடுக்க வந்த பெண்கள் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்தனர் மாவட்ட ஆட்சித் தலைவரும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மாற்றுத்திறனாளி பெண்கள் தொடர்ந்து தாங்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றோம் என்று அடுத்தடுத்து வரும் புகார்களை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்கள் மத்தியிலே பெரும் அதிர்ச்சிகளை இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி