வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக நகரப்பகுதி மற்றும் திருநள்ளாறு, அம்பகரத்தூர், நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.