காரைக்கால் அடுத்த பட்டினச்சேரி கடற்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயிலிலிருந்து சவுரிராஜபெருமாள் பவழக்கால் விமானத்தில் பட்டினச்சேரி கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரிக்காக எழுந்தருளினார். இதில் 07 சுவாமிகள் தனித்தனி பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.