காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பார்வதீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் பங்குனி மாதம் சூரிய பூஜை விழா நடைபெற்றது. இதில் நேற்று மாலை 6 மணியளவில் சூரியனின் ஒளி மூலவர் ஸ்ரீ பார்வதீஸ்வரர் சுவாமி மீது விழுந்த போது சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அப்பொழுது பார்வதீஸ்வரர் சுவாமியின் மீது சூரிய ஒளி நேரடியாக விழும் காட்சியினை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சூரிய பகவானுக்கு தீபாராதனை நடைபெற்றது.