காரைக்கால் அடுத்த தலத்தெரு பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னம்மாகாளியம்மன் ஆலயத்தில் மாசிமக உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சி நாளான இன்று ஸ்ரீ பொன்னம்மா காளியம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர், சவ்வாது உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.