ஐபிஎல் தொடரின் 12ஆவது லீக் ஆட்டம் இன்று (மார்ச் 31) இரவு 7:30க்கு மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. நடப்பு தொடரில் கொல்கத்தா அணி விளையாடிய 2 போட்டிகளில் தலா ஒரு வெற்றி, தோல்வி என புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல், விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்த மும்பை அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் மும்பை இந்தியன்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.