காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்து காரைக்கால் மாவட்ட எஸ். டி. பி. ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் முகமது சித்திக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இஸ்ரேல் அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.