காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜடாயுபுரீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் மாசி மக பிரம்மோற்சவ விழா முன்னிட்டு ஜடாயு - இராவண யுத்தம் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த ஜடாயு - ராவணன் யுத்தம் நிகழ்ச்சியை காண காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.