காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோதண்டராம பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமி பிரம்மோத்ஸவ கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் கோதண்ட ராமருக்கு சிறப்பு திருமஞ்சனமும் அதனை தொடர்ந்து பிரகாரத்தை வலம் வந்து கொடி மரத்தின் அருகே வந்ததும் கருட கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.