காரைக்கால் கடற்கரையில் கடை அமைப்பதற்கு நகராட்சி மூலம் இணையதளம் வாயிலாக பொது ஏலம் விடுவதால் வாடகை தொகை அதிகமாக வசூலிக்கப்படுகிறது. எனவே நகராட்சி மூலம் பொது ஏலத்தை உடனடியாக ரத்து செய்து கடை வியாபாரிகளுக்கு நேரடியாக ஏலம் நடத்த வலியுறுத்தி கடற்கரை வியாபாரிகள் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.