தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

83பார்த்தது
தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று (மார்ச் 31) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த மழையானது அடுத்த ஒரு வாரத்திற்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயில் பொளந்து கட்டிவந்த நிலையில், ஒருவாரத்திற்கு மழை பெய்யும் என்பதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி