காரைக்காலில் விபத்துகளின் போது உயிரிழப்புகளை தவிர்க்க கட்டாய தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தும் வகையில் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு காவல் நிலைய வளாகத்தில் 25க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி காவல்துறை ஐ. ஜி. அஜித்குமார் சிங்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.