சீமான் காலை பதம்பார்த்த இரும்பு மேஜை (வீடியோ)
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி பகுதியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கர்(44) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார். அங்கு மைக் வைப்பதற்காக இரும்பு டேபிள் போடப்பட்டிருந்தது. அந்த டேபிள் சரிந்து விழுந்து சீமானின் கால்களை பதம்பார்த்தது. உடனடியாக அங்கிருந்த தம்பிகள் டேபிளை அப்புறப்படுத்தினர். நன்றி: புதிய தலைமுறை