அமெரிக்காவில் பல்வேறு அங்காடிகளுக்கு ஆர்கானிக் கேரட்டை க்ரீம் வெ பார்ம்ஸ் என்ற நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனை சாப்பிட்ட 39 பேருக்கு ஈ கோலி பாக்டீரியாவால் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஈ கோலி தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில், 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 மாகாணங்களில் ஈ கோலி தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலும் நியூயார்க், வாஷிங்டனில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.