தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திடத்தில் முறைகேடு நடப்பதை தவிர்க்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் க்யூஆர் ஸ்கேன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம். இதன்மூலம் முறைகேடுகளை தடுக்க முடியும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.