உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள NATO கூட்டமைப்பு நாடுகளின் ஏவுகணைகள் ரஷ்யாவை தாக்கினால் அது NATO அமைப்பு நடத்திய தாக்குதலாகவே கருதப்படும். பதிலுக்கு, ரஷ்யா தனது அணு ஆயுதங்களை உக்ரைன் மற்றும் NATO நாடுகள் மீது பயன்படுத்தும்; இது தொடர்ந்து 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய முன்னாள் அதிபரும் அந்நாட்டுப் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான திமீத்ரி மெத்வேதெவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.