திருச்சி துறையூரில் உள்ள நல்லியம்பாளையம் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் வந்து பகவானை பிரார்த்தித்து அபிஷேகத்தில் கலந்து கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும். இறைவனுக்கு பன்னீர், இளநீர், பால், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம், தேன், அரிசிமாவு, திருமஞ்சனம், மஞ்சள்தூள், மலர்கள் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யும் அற்புத காட்சியை காண கண் கோடி வேண்டும்.