கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ச்சோலை கிராமத்தை சேர்ந்த விவசாயி மதன்குமார் மற்றும் ஷீலா ஆகிய தம்பதியரின் மகன் ரோகித் சர்மா (6) மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் சர்மா தனது தெருவிலுள்ள ஆழ்துளை குடிநீர் குழாயை பிடித்து விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது அலறித்துடித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.