"தவெகவில் உழைப்பவர்களுக்கே அங்கீகாரம்" - புஸ்ஸி ஆனந்த்
சேலத்தில் நடைபெற்ற தவெக அரசியல் பயிலரங்கத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நான் வரும் வழிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களைப் பார்த்தேன். அதில், நிரந்தர பொதுச்செயலாளர் என எனது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. தவெகவில் பதவி என்பது நிரந்தரமானது அல்ல. பதவிகள் குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார். எதிர்பார்க்காமல் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்” என்றார். நன்றி: பாலிமர்