கவரப்பேட்டை ரயில் விபத்து - வெளியான புதிய தகவல்

57பார்த்தது
கவரப்பேட்டை ரயில் விபத்து - வெளியான புதிய தகவல்
கவரப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட் நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்து திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 3 நிமிட இடைவெளிக்குள் லூப் லைனில் போல்ட் நட்டுக்களை கழற்ற முடியுமா என சோதனை செய்து பார்க்கப்பட்டது. அனுபவம் பெற்றவர்களே போல்ட் நட்டை கழற்ற 11 நிமிடம் வரை நேரம் எடுத்தது. அதனால் 3 நிமிடங்களில் போல்ட்டை கழற்றி இருக்க வாய்ப்பில்லை என விசாரணையில் தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி