ஹோண்டா நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. புதிய ஸ்கூட்டர் பெட்ரோல் ஸ்கூட்டர் விலையில் அதிக மைலேஜுடன், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வருகிறது. புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விவரங்கள் தெரியவில்லை என்றாலும், நிறுவனம் இதனை ஆக்டிவா எலக்ட்ரிக் என்று அழைக்கலாம் என கூறியுள்ளது. ஒரு சார்ஜில் 120 கிமீ முதல் 150 கிமீ மைலேஜ், இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சம் முதல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.