தமிழகத்தில் பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளமோ படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 12 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செய்முறை தேர்வுகள் அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்குகின்றன. தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக, www.dte.tn.gov.in என்ற தொழில்நுட்ப கல்வி இயக்கக இணையதளத்தில் முழு விவரங்கள் அடங்கிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும்.