விழுப்புரம் மாவட்டம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது அவர், வரும் 2026 சட்டசபை தேர்தலில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், ஏன் தனக்கே கூட இடம் இல்லாமல் போகலாம்.. அதனால், யார் நிறுத்தபட்டாலும் யார் எதிர்த்து நின்றாலும் திமுக தான் வெற்றி பெறும் என்ற நிலையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.