கன்னம், மூக்கின் பின்புறம், நெற்றி ஆகிய எலும்புகளில் உள்ள காற்று நிரப்பப்பட்ட துவாரங்கள் சைனஸ் என அழைக்கப்படுகிறது. இதில் உள்ள திசுக்களில் ஏற்படும் அலர்ஜி, சளியை அதிகரிக்கச் செய்து அடைப்புக்கு வழிவகுக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் இந்த தொற்று எளிதில் ஏற்படுகிறது. இதை குணப்படுத்த மூக்கடைப்பு நீக்கி, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், நாசில் ஸ்ப்ரே பரிந்துரைக்கப்படுகிறது.