கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடை திறப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், முதலமைச்சரின் வருகைக்காக கோயம்புத்தூரில் ரோடு போடுகிறார்கள் என்றால் அடிக்கடி முதல்வர் கோவை வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன் என்று கூறினார். மேலும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிகமான நிதி அங்கன்வாடிகளுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து பேசிய வானதி சீனிவாசன், நிலம் முழுவதும் காலி செய்யப்பட்டு வழங்கப்படவில்லை என்றும், இதனால் மத்திய அரசுக்கு பணிகளை தொடங்குவதில் சுணக்கம் இருப்பதாகவும் கூறினார். நிலம் முழுமையாக காலி செய்யப்பட்டு ஒப்படைப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்க இருப்பதாகவும் தெரிவித்தார்.